தொழில் அதிபரை மணக்கும் பிரபல நடிகை

பிரபல மலையாள நடிகை பிராச்சி தெஹ்லான். இவர் மம்முட்டியின் மாமாங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இந்த படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. டெல்லியை சேர்ந்த பிராச்சி தெஹ்லான் கைப்பந்து வீராங்கனையாகவும் இருக்கிறார். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். பிராச்சிக்கு திருமணம் முடிவாகி உள்ளது. ரோகித் சஹோரா என்ற தொழில் அதிபரை மணக்கிறார்.

இதுகுறித்து பிராச்சி கூறும்போது, “ரோகித்தும் நானும் 7 வருடங் களாக காதலிக்கிறோம். அவரை எனது உறவினர் திருமணத்தில் சந்தித்தேன். மறுநாளே காதலிப்பதாக சொல்லி திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்டார். எனக்கும் அவரை பிடித்தது. பிறகு காதலிக்க தொடங்கினோம். எங்கள் திருமணம் வருகிற 7-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. ஊரடங்கினால் 50 பேரை மட்டும் திருமணத்துக்கு அழைத்துள்ளோம். திருமணத்துக்கு வருகிறவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here