கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே புளியரசி கிராமத்தில் ஒற்றை யானை தாக்கி முனிராஜ் (28) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயடைந்த ராஜேந்திரன் (41) கிருஷ்ணகிரி அரசு மருந்துவமனையில் சிகிழ்சை பலனின்றி உயிரிழந்தார்.
சூளகிரி பேரிகை சாலையில் புளியரசி கிராமத்தில் யானை தாக்கி இறந்த முனிராஜ் உடலை வைத்து சாலை மறியல் நடைபெற்று வருகிறது. சூளகிரி காவல் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் பேச்சுவார்தை நடத்தி வருகிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வெப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினர் பி.முருகன் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் யானைகளை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு வனத்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.