திரைப்பட பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சமீபத்தில் கொரனோ தோற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையின் போது அவர் வெளியிட்ட ஒரு வீடியோவில் தான் நலமாக இருப்பதாகவும், தனது உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சற்று முன் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் ’கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவித்துள்ளது. அவர் தற்போது நார்மல் வார்டில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களையும் கோலிவுட் திரையுலகினர்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.




















