பணத்தை விட அதுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன்

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான்பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால்கூட நிச்சயமாக நடிக்க மாட்டேன். அதே நேரம் கதை பிடித்து இருந்தால் தயாரிப்பாளர் எவ்வளவு குறைவாக சம்பளம் தருவதாக சொன்னாலும் ஒப்புக்கொண்டு நடித்து விடுவேன்.

நடிகைக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம். பணம் முக்கியம் இல்லை. நான் பணத்துக்கு இரண்டாவது இடம்தான் கொடுப்பேன். கதை தேர்வில் இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் உங்களுக்கு ஏன் தோல்விகள் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம். சில கதைகள் கேட்கும்போது மிகவும் நன்றாக இருக்கும்.

இது பெரிய வெற்றிபெறும் என்ற நம்பிக்கையில் நடிப்போம். ஆனால் அது திரையில் வரும்போது வேறுமாதிரி மாறிப்போய் விடுகிறது. வெற்றி தோல்வி என்பது நமது கையில் இல்லை. ஆனாலும் கதை தேர்வு செய்வதை மட்டும் நம் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்.” இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here