பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தயாராகும் கமல்

தமிழ் தொலைகாட்சிகளில் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ளன. வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கப்படும் இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது.
விரைவில் பிக்பாஸ் 4-வது சீசனுக்கான பணிகள் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இதற்கான படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முறுக்கு மீசை, வெள்ளை தாடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.
பிக்பாஸ் 4-வது சீசனிலும் சர்ச்சைக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. ஏனெனில், இதில் வனிதாவின் 3-வது திருமணத்தை எதிர்த்து பரபரப்பாக பேசப்பட்ட சூர்யா தேவி மற்றும் நடிகைகள் சனம் ஷெட்டி உள்ளிட்ட சிலர் தேர்வாகி இருப்பதாக பேசப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here