புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.

இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை.

இந்நிலையில், நடிகை ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். கல்யாணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்காக பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணியாம்.

அது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்த கொரானோ லாக்டவுனில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த ஹன்சிகா, தற்போது புதிய தொழில் தொடங்கி உள்ளார். பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் அவர் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here