பௌர்ணமி வழிபாடு: சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது.

இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பெளர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு இன்று முதல் நிபந்தனைகளுடன் கோயிலில் பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு இன்று பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதனை அடுத்து கரோனோ அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு கோயில் நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கியது.

குறிப்பாக உடல் பரிசோதனை, மாஸ்க், அணிய வேண்டும், சேனிடைசர் கொண்டு கை கழுவுதல் அதன் பின்பே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே அனுமதி எனவும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here