கண்கலங்கிய டிடி. ஏன் தெரியுமா?

தமிழகத்தின் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் டிடி என்று அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்துள்ளார்.

இவர் நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவு குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். ஒரு மகிழ்ச்சியான மனிதர், அவருடன் பேசுவதற்கு மிகவும் விருப்பப்படுவேன், அவருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கும்போது இருவருக்கும் மிகப்பெரிய புரிதல் இருக்கும் என டிடி கூறியுள்ளார்.

எப்போதும் நிகழ்ச்சிகளுக்கு முன்பே தயாராகமாட்டார் , நாம பார்த்துக்கலாம் என்பார், இமிட்டேஷன் செய்வதில் பாலாஜிதான் முன்னோ டி என கண்ணீர் மல்க அவரின் திறமை பற்றி பேசியுள்ளார். ஜூலை வரையில் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன், நல்ல மனிதர், அவருடைய மறைவு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது என தெரிவித்துள்ள டிடி அவர் குரலை மீண்டும் கேட்க முடியாது என்று நினைக்கும் போது மனது கணத்துடன் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் பலரும் நடிகர் வடிவேல் பாலாஜியின் மறைவுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவால் பெரிய மற்றும் சின்னத்திரையுலகம் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here