மூச்சு விட முடியவில்லை

அமெரிக்காவில் எம்.பி.ஏ படிப்பதற்காக நடிகை ரிச்சா கங்கோபத்யா சினிமாவில் இருந்து முற்றிலும் ஒதுங்கி விட்டார். ஜோ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது கணவருடன் அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அங்கு தற்போது காட்டுத்தீ காரணமாக பெரிய சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதியில் காற்றின் தரமும் குறைந்து இருக்கிறது. இதனால் போர்ட்லேண்ட் மேயர் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

இது பற்றி டுவிட்டரில் ரிச்சா கூறி இருப்பதாவது: ‘காற்றின் தரம் இங்கு மிக மோசமாக இருக்கிறது. புகை வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது. அனைத்து இடங்களிலும் ஏர் பியூரிபையர்கள் விற்று தீர்ந்து விட்டன. நாங்கள் வீட்டிலேயே மூச்சு விட முடியாத நிலையில் இருக்கிறோம். காற்று இல்லாமல் இந்த புகை காரணமாக வரும் தலைவலியுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here