வைரலாகும் ரோஜாவின் மகள் புகைப்படம்

நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தம்பதியின் மகளுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை ரோஜா. 90களில் குஷ்பூ, மீனா, ரோஜா ஆகிய மூவரும் மிகவும் பிரபலம். இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ரஜினி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்த பெருமையை கொண்டவர் ரோஜா.

தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததால் ரோஜா 1999ஆம் ஆண்டு ஆந்திராவில் முக்கியமான கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

ரோஜாவும், இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள்.

திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்ட ரோஜா முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார். தற்போது ஆந்திரமாநிலம் நகரி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்து வரும் ரோஜா, கட்சியின் மாநில மகளிரணி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

சமீபத்தில் ரோஜா மகள் அன்சுமலிகாவின் 17ஆம் பிறந்த நாளை கொண்டாடினார். அதுமட்டுமல்லாமல் கொஞ்ச நாளாவே மகளுடைய ஃபோட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அப்லோட் செய்து வருகிறார் ரோஜா.

அவரைப் பார்த்த நெட்டிசன்கள் ரோஜாவை விட அவரது மகள் அழகாக இருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளுகின்றனர்.

அதுமல்லாமல் அவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக தெலுங்கு திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here