சினிமாவில் பெண்கள் நிலை இப்படிதான் இருக்கு

வடசென்னை படத்தின் மூலம் ஆண்ட்ரியாவும் ஐஸ்வர்யா ராஜேஷும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல நடிகைகள் என்ற பெயரை பெற்றனர். அந்த படத்துக்குப் பிறகு இருவரும் நெருக்கமான நண்பர்களாக பழகி வருகின்றனர். இதையடுத்து இருவரும் இப்போது இன்ஸ்டாகிராமில் லைவ்வாக சாட் செய்தனர்.

அப்போது சினிமாவில் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்படுவதாகவும், பெண் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எனப் பலரும் நினைப்பதாக ஆண்ட்ரியா கூற, ஐஸ்வர்யா ராஜேஷோ ‘சினிமாவில் இருக்கும் பெண்களை ஆண்கள் தங்கள் தங்கைகளாக, அம்மாவாக நினைக்க வேண்டும் ‘ எனக் கூறியுள்ளார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்கள் நெகட்டிவிட்டியாக இருப்பதால் அதைப் படிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here