சிப்பாங் பகுதியில் நீர்த்தடை சரிசெய்யப்பட்டது

செப்டம்பர் 15 ஆம் தேதி கே.எல்.ஐ.ஏ மசூதிக்கு அருகிலுள்ள பண்டார் ஸ்ரீ எஹ்சானில் பழுதடந்த நீர்க்குழாய் காரணமாக சிப்பாங், கோல லங்காட்டில் ஒன்பது பகுதிகளில் திட்டமிடப்படாத நீர் வழங்கல் தடங்கல் எற்பட்டிருந்தது.

பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் எஸ்.டி.என் பி.டி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் எலினா பாசெரி ஓர் அறிக்கையில், திட்டமிடப்படாத நீர் வழங்கல் தடங்கலின்போது பயனீட்டாளர்கள் பொறுமையாக இருந்ததற்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்திய நீர் வழங்கல் தகவல்களுக்கு ஆயர் சிலாங்கூர் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை ‘கூகிள் பிளே’ அல்லது ‘ஆப்ஸ் ஸ்டோரில்’ பதிவிறக்கம் செய்யுமாறு அந்த அறிக்கை  பயனீட்டாளர்களுக்கு அறிவுறுத்தியது.

பயனீட்டாளர்கள் ஆயர் சிலாங்கூர் பேஸ்புக், ட்விட்டர் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றைப் பார்ப்பத்ற்கும் அல்லது விசாரணைகள், உதவிகளுக்கு www.airselangor.com என்ற இணையதளத்தைப் பார்வையிடவும் முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here