5 மாதத்தில் 100 கிலோ எடையை 79 கிலோ ஆக்கிய ஹீரோ

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு கெத்தாக தனது ரீ என்ட்ரியை கொடுத்து வருகிறார். மஹா படத்தில் ஹன்சிகாவுடன் நடித்து முடித்தவர், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடிக்கிறார். முன்னதாக லண்டனில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் மற்றும் அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ கடந்த ஆண்டு தொடக்கத்தில் ஆன்லைனில் வெளியானது. சமூக ஊடகங்களில் வெளியான சிம்புவின் புகைப்படங்களும் நிறைய இருந்தன, நடிகரின் புதிய அழகான தோற்றம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் மீண்டு அவரது உடலில் வெயிட் போட்டது.

மீண்டும் எடை குறைக்க நேரம் பார்த்து வந்த நிலையில் கொரோனா லாக்டவுன் அவருக்குச் சரியான வாய்ப்பாக அமைந்தது. ஒர்க் அவுட் செய்து 100 கிலோ எடையை 75 கிலோவாக்கி தனது வல்லவன். ஒஸ்தி படத் தோற்றத்துக்கு வந்திருக்கிறார். பாகுபலிக்கு முன்பாக இஞ்சி இடுப்பழகி படத்திற்காக 100 கிலோ வெயிட் போட்ட நடிகை அனுஷ்கா தனது வெயிட்டை குறைக்கக் கடந்த 2 வருடமாக முயன்றும் ஓரளவுக்கே குறைக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் புதிய தோற்றத்தை உடனிருக்கும் நண்பர்கள் வியந்து பாராட்டுகின்றனர். ரசிகர்கள் அவரின் முழுமையான புதிய பரிமாணத்தை மாநாடு படத்தில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக்டவுன் காரணமாக மாநாடு படத்தின் தயாரிப்பு நீண்ட காலமாக தாமதமானதால் அப்படம் கைவிடபடுவதக் தகவல் வெளியானது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்த படத்தின் தயாரிப்பாளர் ‘மாநாடு’ நிறுத்தப்படாது லாக்டவுன் முடிவுக்கு வந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் உறுதிப்படுத்தியிருந்தார்.
சிம்பு அடுத்து தனது பெயரிடப்படாத படத்தைத் தொடங்கவிருக்கிறார். இது கன்னட ஹிட் படமான முப்தியின் ரீமேக் ஆகும். கன்னடத்தில் இயக்கிய இயக்குனர் நாரதன், தமிழ் ரீமேக்கையும் இயக்க உள்ளார். இதில் கவுதம் கார்த்திக் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்பு தனது ரீ என்ட்ரியை மிகவும் வலுவாகத் தரத் திட்டமிட்டிருக்கிறாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here