கனமழை காரணமாக பாதியிலேயே நின்ற கீழடி அகழாய்வு பணிகள்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழாய்வு பணிகள் 40 லட்சம் ரூபாய் செலவில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரைக்கும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதத்துடன் இந்த பணிகள் நிறைவடைய இருந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் அகழாய்வு பணிகள் நடந்து வந்த நான்கு இடங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. ஆறாம் கட்டமாக நடத்தப்பட்டு வந்த இந்த அகழாய்வில் தற்பொழுது மழை காரணமாக மூடி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் பணிகளின் போது குழந்தையின் எலும்புக்கூடு, மண்டை ஓடு, முதுமக்கள் தாழிகள், இணைப்பு பானைகள், கருப்பு சிவப்பு பானை, தரை தளம் என பல்வேறு பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் பெய்த மழையால் அந்தக் குழிகளில் நீர் தேங்கியுள்ளதால் பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனவும், இந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.