அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

பெட்டாலிங் வட்டாத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தாங்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகில் மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக பெட்டாலிங் மாவட்ட போலீசாருக்கு அளித்த புகாரை தொடர்ந்து ரோந்து பணியில் இருந்த போலீசார் பண்டார் ஶ்ரீ டாமான்சாரா, ஜாலான் பிஜேயு 9/1 என்ற பகுதியில் மிகுந்த துர்நாற்றத்துடன் ஒரு பெண்ணின் சடலத்தை இருப்பதை கண்ட போலீசார் உடனடியான தீயணைப்பு மீட்பு குழு மற்றும் தடவியல் நிபுணர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

பெண்ணின் சடலம்

தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வந்த பெட்டாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் நிக் ஏசானி கூறுகையில் கண்டெடுக்கப்பட்டது ஒரு பெண்ணின் சடலம் என்றும் அவர் இறந்து ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரை இருக்கும் என்று கூறினார்.

அப்பெண்ணின் சடலத்திற்கு அருகே எந்தவித ஆயுதம் எதுவும் கண்டெடுக்கவில்லை என்பதால் அவரின் மரணம் குறித்து தற்பொழுது எந்த தகவலும் தெரிவிக்க முடியாது என்றும் கூறினார். விவரம் அறிந்த பொதுமக்கள் ஏஎஸ்பி ஹபிஸி 013-3587571 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here