விஜய் டிவியின் புதிய அவதாரம், சன் டிவிக்கு….

இந்திய அளவில் நம்பர் ஒன் சேனலாக இருப்பது சன் டிவிதான். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளிலும் டிவி சேனல்களில் நடத்தி வருகின்றன.

என்னதான் தமிழ்நாட்டில் விஜய் டிவி, ஜெயா டிவி, ஜீ தமிழ் என வரிசைகட்டி வந்தாலும் இன்னமும் ஆரம்பத்திலிருந்து நம்பர் 1 இடத்தில் இருப்பது சன் டிவிதான்.

சமீபகாலமாக சன் டிவியின் சீரியல்கள் பெரும்பாலும் குடும்பப் பெண்களை கவர முடியாமல் தடுமாறி வருகிறது. அதேசமயம் ஜீ தமிழ், விஜய் டிவி போன்ற சேனல்களில் வெளியாகும் சீரியல்கள் இளம் ரசிகர்கள் முதல் கொண்டு கவர்கின்றன.

அதன் அடிப்படையில் தற்போது விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் ஆகிய 3 சேனல்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நடைபெற்று வருகிறது.

போட்டியை அதிகரிக்க விஜய் டிவி தற்போது விஜய் மியூசிக் என்ற புதிய சேனல் ஒன்றை வருகிற அக்டோபர் 4ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்த உள்ளார்களாம்.

விஜய் மியூசிக் சேனல் சன் மியூசிக் சேனலுக்கு போட்டியாக இருக்கும் என்கிறது சினிமா வட்டாரம். இதை எப்படி சன் டிவி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here