நம்ம ரைசாவா இது?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானவர் ரைசா வில்சன். நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாக பட வாய்ப்புகளும் மல மலவென குவியத்தொடங்கியது. இதனை ரைசா சரியான நேரத்தில் மிகவும் ஷார்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்னரே ரைசா விஐபி- 2 படத்தில் நடித்தார். பிறகு பிக் பாஸ் ஹவுஸ் மெட் ஆன ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் நடித்திருந்தார். அப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் தற்போது ‘ஆலிஸ்’ விஷ்ணு விஷாலுடன் FIR, அலைஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ரைசா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அப்பா மற்றும் அக்காவுடன் குட்டி பாப்பாவாக இருக்கும் ரைசாவை பார்த்து அனைவரும் வியந்துவிட்டனர்.

அந்த பதிவில், ” வேடிக்கையான கதை: நாங்கள் இளமையாக இருந்தபோது என் பெற்றோர் நான் கடினமாகப் படித்து ஒரு பெரிய கார்ப்பரேட் அதிகாரியாக ஆக வேண்டும் என்று சொன்னார். என் சகோதரி மிகவும் அழகாக இருந்ததால் அவர்கள் ஒரு நடிகையாக ஆவதற்கு பயிற்சி அளிப்பதாக சொன்னார். ஆனால், இப்போ காலம் எப்படி மாறிடுச்சு பார்த்தீங்களா? எல்லாம் கடவுளின் திட்டம். என்னுடைய அக்கா தற்ப்போது PhD படித்துக்கொண்டிருக்கிறார். என ரைசா அந்த பதிவில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here