நடிகர் சிம்புவின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஞாயிறன்று வெளியாகியுள்ளது.
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்துக்கு முன்பாகவே, பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் சிம்பு நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பில் சனிக்கிழமையில் இருந்து கலந்து கொண்டுள்ளார்.
முதலில் இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. தற்போது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனம இதற்கு முன்பாக ‘ஜீரோ’ மற்றும் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமலே படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஞாயிறன்று முதன்முறையாக இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். அத்தோடு படத்திற்கு ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக எஸ்.எஸ்.தமன், எடிட்டராக ஆண்டனி, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் மற்றும் பாடலாசிரியராக யுகபாரதி ஆகியோர் பணிபுரிகிறார்கள்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. படம் 2021-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்கபப்டுகிறது.