அமெரிக்காவுக்கு பறக்கும் ரஜினியின் ரத்த மாதிரி!

நடிகர் ரஜினி, ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை, அமெரிக்க மருத்துவமனையில சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவரு… அதனால, தொடர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போக வேண்டியவர், கொரோனா பாதிப்பால, அங்க போக முடியலை. ஆனாலும், அமெரிக்க மருத்துவர்களின் ஆலோசனைபடி, அவ்வப்போது, ரஜினியின் ரத்த மாதிரிகள் அமெரிக்க மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கு அனுப்படுதாம்…!குஷ்பு குடும்பத்தினர் ஆதங்கம் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதி எம்.எல்.ஏ., கு.க.செல்வத்தின் மருமகன் துளசிராமன், விபத்தில் சிக்கி இறந்துட்டாரு… செல்வம் வீட்டுக்கு, பா.ஜ., தலைவர்கள் துக்கம் கேட்கப் போனாங்க. அந்த நிகழ்ச்சிக்கு, சமீபத்துல கட்சியில இணைந்த குஷ்புவையும் கூட்டிட்டு போய்ட்டாங்க. பா.ஜ.,வுல இணைந்த பின், முதல் நிகழ்ச்சியே துக்கம் கேட்குற நிகழ்வா அமைந்துடுச்சேன்னு, குஷ்பு வீட்டினர் ரொம்பவே, ‘பீல்’ பண்றாங்களாம்…!ஸ்டாலினை பதற வைத்த விஷயம்கடந்த பார்லிமெண்ட் தேர்தல்ல பெற்ற ஓட்டுக்களை விட, குறைவான ஓட்டுக்களைத் தான், கொங்கு மண்டலத்துல, தி.மு.க., பெற முடியும்னு ஸ்டாலினிடம் வியூக வகுப்பாளர் பிரசாந்த் அறிக்கை கொடுத்திருக்காரு. ..அறிக்கையால பதறிப் போன ஸ்டாலின், இதுசம்பந்தமா, கொங்கு பகுதியில இருக்கிற கட்சியினரிடம் பேசி, இதை சரி செய்யும் யோசனையைகேட்டிருக்காரு. கட்சியில, ‘கோஷ்டி கானத்தை’ ஒழிச்சால, பிரச்னை தீர்ந்துடும்னு, கட்சியினர் சொல்லியிருக்காங்க… இதுக்கு அப்புறம் தான், கொங்கு பகுதி நிர்வாகிகள் கூட்டத்தை ஸ்டாலின் கூட்டி, சில ஆலோசனைகளை சொல்லிருக்காராம்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here