‘அரசியல் பேசும் அம்மன்’ – வெளியானது மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர்

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.

நடப்புலகில் பூமிக்கு அம்மன் வந்தால் என்னெவெல்லம் நடக்கும் என்பதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் மூக்குத்தி அம்மன் படமானது தீபாவளிக்கு ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் டிஸ்னி ப்ளஸில் வெளியாகும் எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இப்படத்தில் ட்ரெய்லர் இன்று வெளியானது.

காமெடி படமாக எதிர்பார்க்கப்பட்டாலும் நிகழ்கால அரசியல் பேசும் படமாகவே மூக்குத்தி அம்மன் தெரிகிறது. மதத்தை வைத்து நடக்கும் பல விஷயங்களை காமெடியாக இந்தப்படம் பேசும் என ட்ரெய்லரே காட்டுகிறது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் பட ட்ரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here