பயங்கரவாதத்தை தூண்ட சீனா சதி

வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாதத்தை துாண்ட, சீனா சதி திட்டம் தீட்டியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம், திராப் பகுதியில், பாதுகாப்புப் படை வீரரை, என்.எஸ்.சி.என்., பயங்கரவாத அமைப்பு கொன்றதில், சீனாவின் பங்கு உள்ளது தெரிய வந்துள்ளது.நாட்டின் வடகிழக்கு எல்லையில், அருணாச்சல பிரதேச மாநிலம், இந்தியாவுடன் இணைந்திருப்பது, சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. அருணாச்சல் மாநிலம் முழுதும், தங்களுக்குத் தான் சொந்தம் என, தொடர்ந்து கூறி வருகிறது. அருணாச்சலில் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டாலும், அருணாச்சலுக்கு, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் சென்றாலும், புலம்பி தவிப்பது, சீனாவின் பிறவி குணமாகிவிட்டது.அதிக முக்கியத்துவம்நம் நாட்டின் சிக்கிம் மாநிலத்தின் மீதும், சீனா கண் வைத்துள்ளது, மத்தியில், பிரதமர் மோடி தலைமையில், தே.ஜ., கூட்டணி அரசு அமைந்த பின், கடந்த ஆறு ஆண்டுகளில், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.இது, சீனாவுக்கு பெரும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியது. 1970ம் ஆண்டு முதல், வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மிக வேகமாக செயல்பட்டு வந்தன. வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வந்த பல அமைப்புகளுக்கு, சீனாவுடன் தொடர்பு இருந்து வந்தது. நாகா, மணிப்பூர் தீவிரவாத அமைப்புகளுக்கு, சீனா பகிரங்கமாக உதவி செய்து வந்தது.மத்திய அரசுக்கும், நாகா தேசிய கவுன்சிலுக்கும் இடையே, 1975ல், ஷில்லாங் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை, பயங்கரவாத தலைவர்கள், கப்லாங், துரிங்கலலெங் முவிஹ் ஆகியோர் எதிர்த்தனர்.

சீனாவின் அறிவுறுத்தல் படியே, இந்த ஒப்பந்தத்தை அவர்கள் எதிர்ப்பதாக, அப்போது கூறப்பட்டது. இருவரும் இணைந்து தான், என்.எஸ்.சி.என்., எனப்படும், நாகாலிம் தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்பை, 1980ல் துவக்கினர். சில ஆண்டுகளுக்குப் பின், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.என்.எஸ்.சி.என்., அமைப்பும் இரண்டாக உடைந்தது. இரண்டு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும், சீனாவுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தனர்.

இவர்களுக்கு சீனாவிலிருந்து, வங்கதேசம், மியான்மர் வழியாக ஆயுதங்கள் வந்தன. அசாமில் செயல்பட்டு வந்த உல்பா அமைப்புக்கும், சீனாவே ஆயுதங்களை வழங்கி உதவி செய்து வந்தது. உல்பா பயங்கரவாதிகள் நடத்திய பல தாக்குதல்களின் பின்னணியில், சீனா இருந்து உள்ளதும் தெரியவந்தது.ஒடுக்கப்பட்டு விட்டனகடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசின் நடவடிக்கைகளில், வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாத அமைப்புகள் ஒடுக்கப்பட்டு விட்டன. நாகா அமைதி பேச்சில், தீவிரவாத அமைப்புகளும் இடம் பெற்றன; இது, சீனாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான், லடாக் எல்லையில், சமீபத்தில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக, தைவானுடன் நெருக்கம் காட்டுவது என்று இந்தியா முடிவெடுத்துள்ளது.தைவானுடன், இந்தியா சமீபத்தில் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் சீனப் பொருட்கள் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. அதனால், தைவானுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம், சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், கோபம் அடைந்துள்ள சீனாவின் செய்தித்தாளான, ‘குளோபல் டைம்ஸ்’ ஆசிரியர் ஹுஷிஜின், ‘இந்தியாவிலிருந்து வடகிழக்கு பகுதிகளை பிரிக்க, சீனா நடவடிக்கை எடுக்கும்’ என, கூறியுள்ளார்.எளிதாக பிரிக்கலாம்இது குறித்து, ‘டுவிட்டரில்’ அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது:தைவான் பிரச்னையில், இந்தியா தேவையின்றி தலையிடுகிறது. வடகிழக்கு இந்தியாவில், பிரிவினைவாத சக்திகளுக்கு நாங்கள் ஆதரவு அளித்து, சிக்கிமை தனிமைப்படுத்த முடியும் என்பதை, இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். இந்திய தேசியவாதிகள், தங்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்களது நாட்டை, நாங்கள் நினைத்தால் எளிதாக பிரிக்கலாம்.

இவ்வாறு, அவர் பதிவிட்டிருந்தார்.இந்நிலையில் தான், அருணாச்சல பிரதேச மாநிலம், திராப் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அசாம் பாதுகாப்புப் படையினர் மீது, முவிஹ் தலைமையிலான, என்.எஸ்.சி.என்., அமைப்பு, சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதில், ஒருவர் இறந்தார்; சிலர் காயம் அடைந்தனர்.அம்பலமாகியுள்ளதுஇந்த தாக்குதலை நடத்த, என்.எஸ்.சி.என்., அமைப்புக்கு, சீனாவின் மறைமுக உதவி இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், பயங்கரவாத மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க., சீன சதி திட்டம் தீட்டியுள்ளது அம்பலமாகியுள்ளது. இதை தான், ஒப்புதல் வாக்குமூலமாக, ‘குளோபல் டைம்ஸ்’ ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரில், பிரிவினை மற்றும் பயங்கரவாதிகளை, பாகிஸ்தான் மறைமுகமாக ஆதரிப்பது போல், வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினைவாதிகளை ஆதரிக்கும் பணியை, சீனா துவக்கி உள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here