புத்ராஜெயா: மூன்று லேயர் கொண்ட முகக்கவசத்தின் புதிய சில்லறை உச்சவரம்பு விலை இந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு துண்டுக்கு 70 சென் ஆக குறைக்கப்படும் என்று உள்நாட்டு வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலெக்சாண்டர் நாந்தா லிங்கி தெரிவித்தார்.
மூன்று-பிளை முகக்கவத்தின் மொத்த உச்சவரம்பு விலையும் 95 செனில் இருந்து 65 செனாக குறைக்கப்படும்.
புதிய விதிமுறைகளை, குறிப்பாக முகக்கவச பயன்பாட்டை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களை ஈடுபடுத்தி முகக்கவசத்தின் விலையை அமைச்சகம் பரிசீலித்தது என்றார்.
இந்த புதிய உச்சவரம்பு விலை 2011 விலை கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்பு சட்டம் மூலம் செயல்படுத்தப்படும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். – பெர்னாமா