நடிகர் விவேக்கா இது.?

நகைச்சுவை நடிகர் விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோஷூட் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் விவேக்.இவரது காமெடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கருத்தோடு காமெடி கூறும் இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகர் விவேக் போட்டோ ஷூட் ஒன்றை எடுத்திருக்கிறார்.

அதில் வெள்ளை நிற உடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் ஸ்டைலாக இருக்கும் அவரது போட்டோக்ககள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. என்னோட இந்த தோற்றத்திற்கு முழுக்க காரணம் காஸ்ட்யூம் ஸ்டைலிஷ் சத்தியாவும் மற்றும் அவரது குழுவும் தான் காரணம் என கூறி அவர்களுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார் நடிகர் விவேக். கொரோனா ஊரடங்கில் பல்வேறு விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்ட விவேக், தற்போது ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here