மாஸ்டர் படத்தால் நஷ்டமா?

விஜய் -விஜய்சேதிபதி இணைந்து நடித்திருக்கும் மாஸ்டர் படம் ரிலீசுக்கு தயாராக இருந்தும், கொரோனாவினால் முடங்கிக்கிடக்கிறது. இப்படத்தின் மேல் எழுந்த எதிர்பாப்பினால் படவேலைகள் நடந்துக்கொண்டிருந்த போதே, விநியோகஸ்தர்கள் ஏரியா உரிமையை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அப்படி இருக்கையில், பல மாதங்களாக இப்படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் விநியோகஸ்தர்களுக்கு லாபமா? நஷ்டமா? என்ற கேள்வியை முன்வைத்தபோது அது குறித்து மனம் திறந்தார் ‘ராக்போர்ட்’ முருகானந்தம்.

திரைப்பட விநியோகதரும், புரடியூசருமான முருகானந்தம் இதுவரைக்கும் 145 படங்களை திரையிட்டிருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.

அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி என்று பல முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார்.

விநியோக வியாபாரத்தில் முன்ணனி நிறுவனமாக வளர்ந்துவரும் ராக் போர்ட் எண்டர்டெயின்மென்ட் முருகானந்தம் முதல் முறையாக “குருதி ஆட்டம்” படம் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைத்தார். அதர்வா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் குருதி ஆட்டம் படத்தை தொடர்ந்து YouTube Put Chutney ராஜா மோகன் இயக்கத்தில், இரண்டவாது படைப்பாக தயாரித்து வருகிறார்.

மிஷ்கின் இயக்கத்தில்ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் மூன்றாவது தயாரிப்பாக பிசாசு 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள பூமி படத்தின் தமிழகத்தில் உள்ள ஒன்பது ஏரியா உரிமைகளில் சென்னை, செங்கல்பட்டு தவிர்த்து ஏழு பகுதிகளில் இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார் முருகானந்தம். ஆனால், இப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து முருகானந்தத்திடம் கேட்டபோது, ”இந்த விவகாரம் தொடர்பாக புரடியூசரிடம் பேசியிருக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நம்புகிறேன்”என்றார்.

மாஸ்டர் பட தாமதத்தால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்று பேச்சு இருக்கிறதே? என்ற கேள்விக்கு, ”மாஸ்டர் படத்தின் கோவை விநியோக உரிமையை வாங்கி இருக்கிறேன். படம் வெளிவர தாமதம் ஆவதால் விநியோகஸ்தர்களுக்கு இருக்கும் நிலைமையை புரிந்தகொண்டு, புரடியூசர் லலித்குமார் எல்லாவற்றையும் சரிசெய்துகொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறது. இந்த விவகாரத்தில் அவர் அக்கறையுடன் இருக்கிறார்”என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here