கடுமையான குளிரால் தினமும் வீரர்களை மாற்றும் சீனா

புதுடெல்லி:

கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள சீன ராணுவ வீரர்கள் குளிரைth தாங்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால், அவர்கள் தினமும் சுழற்சி முறையில் மாற்றப்பட்டு வருகின்றனர்.

கிழக்கு லடாக்கில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே தொடங்கிய மோதல் போக்கு, தற்போது வரை நீடிக்கிறது. எல்லையில் இருநாட்டு ராணுவமும் தலா 50 ஆயிரம் வீரர்களை குவித்து வைத்துள்ளன. குளிர்காலத்தில் சீன தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், இந்திய ராணுவத்தின் முப்படைகளும் இங்கு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சியாச்சின் பனிச்சிகரத்தின் கொடூரமான குளிரை தாங்கும் வல்லமை இந்திய வீரர்களுக்கு உள்ளது. அதனால், லடாக் எல்லையில் நிலவும் கடினமான குளிரை அவர்கள் எளிதாக தாங்கிக் கொண்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த குளிரை சீன வீரர்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால், ஏராளமான வீரர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள தனது வீரர்களை சீன ராணுவம் தினமும் சுழற்சி முறையில் மாற்றி வருகிறது. அதாவது, லடாக்கில் ஒருநாள் நிறுத்தப்படும் வீரர், மறுநாள் குளிர் இல்லாத பகுதிக்கு அனுப்பப்படுவார். அவருக்கு பதில் மற்றொரு வீரர் ஒருநாள் பாதுகாப்பில் ஈடுபடுவார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here