பிரபலத்துடன் சித்ரா எடுத்த செல்பி

நடிகை சித்ரா உயிரோடு இருக்கும் போது மிகப் பெரிய பிரபலத்துடன் செல்பி எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால், அவருடன் இருந்த பிரபலமும் தற்போது உயிரோடு இல்லாததால் சோகம் நிலவுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் சித்ரா. இவர் நேற்று முன் தினம் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் அனைவரிடமும் சிரித்து பேசி கலகலவென இருந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்ட செய்தி பரவியதால் ரசிகர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு, அவர் நடித்த டிக்டாக் வீடியோக்கள், அவரது புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் வைரலாக்கி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். துருதுருவென பேச்சு, நல்ல நடிப்பு, எப்போதும் சிரித்த முகம் கொண்ட சித்துவா இப்படி செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

சித்ரா ஒரு நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துடன் எடுத்த செல்பி புகைப்படமும் வைரலாகி வருகிறது. தற்போது சித்ராவும் உயிருடன் இல்லை, அது போல் அவர் புகைப்படம் எடுத்த எஸ் பி பாலசுப்பிரமணியமும் உயிருடன் இல்லை என்பதால் ரசிகர்களின் சோகம் மேலும் அதிகரிக்கிறது.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் எத்தனை படங்கள், கலகல வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. இவையெல்லாம் மீண்டும் ஒரு முறை ரசிகர்கள் கண்ணீருடன் ரசித்து வருகிறார்கள். ஆனால் மேலும் தனது அதீத நடிப்பால் ரசிகர்களை மகிழ்விக்க சித்ராதான் உயிருடன் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here