ஐந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹருன் சமீபத்திய கடனை அடைப்பதற்காக எவ்வாறு நிதி திரட்ட முடிந்தது என்பதை எம்ஏசிசி ஆராய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரீனா அறிவித்த கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட சொத்துக்களுடன் கடனைத் தீர்த்ததாக தெரிவித்திருப்பது ஏற்புடையதல்ல என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
“இந்த விஷயத்தை விசாரிப்பதில் MACC மேற்கொள்ளும் தாமதமானது பொது மக்களின் எதிர்மறையான கருத்துக்கு வழிவகுக்கும். இது சுயாதீனமான, நியாயமானதாக இருக்க வேண்டும். மேலும் நேர்மையுடன் செயல்படும் என்று குழு கூறியது.
இக்குழுவில் சலாவுதீன் அயூப் (அமானா-புலாய்), அமிருதீன் ஹம்சா (பெஜுவாங்-குபாங் பாசு), இஸ்னாராய்சா முனிரா மஜிலிஸ் (வாரிசன்-கோத்தா பெலுட்), சிவராசா ராசையா (பி.கே.ஆர்-சுங்கை பூலோ) மற்றும் தியோ-நி சிங் (டிஏபி- கூலாய்) ஆகியோர் உள்ளனர்.
பிப்ரவரியில், மூன்று பிரெஞ்சு நிறுவனங்கள் தாக்கல் செய்த RM1,340,642.02 உரிமைகோரலை ரீனா தீர்த்துக் கொண்டார். கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட அமைச்சரவை அமைச்சர்களின் MACC இன் சொத்து அறிவிப்பு பதிவின் படி, ரீனா மாத வருமானம் RM34,004.48 மற்றும் சொத்துக்கள் RM1 மில்லியனுக்கும் குறைவாக இருந்தது.
MACC இதுபோன்ற தகவல்களை பொதுமக்களிடம் பகிரங்கப்படாமல் வைத்திருந்தது. பக்காத்தான் ஹாரப்பன் நிர்வாகத்தின் போது சொத்து அறிவிப்புகளை வெளியிடுவது தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் அப்துல் ரஹ்மானுக்கு பெர்சத்துவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் நிதியில் RM1.12 மில்லியனை முறைகேடாகப் பயன்படுத்தியதாக MACC முடிவு செய்ததற்கு பதிலளிக்கும் வகையில் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தனர். சையத் சாதிக் மீது குற்றச்சாட்டு சுமத்த செய்த முடிவு அரசியல் நோக்கம் கொண்டது என்று தாங்கள் நம்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு மற்றும் 2018 தேர்தலுக்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டபோது இரண்டு குற்றச்சாட்டுகளும் இப்போது விசாரணைக்கு வந்துள்ளது என்பது மிகவும் சந்தேகத்திற்குரியது என்று குழு தெரிவித்துள்ளது.
























