கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து – சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து பரிந்துரைக்கலாமா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.


கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் உலகம் முழுவதும் பரிந்துரைக்கப்பட்டு , சில நாடுகளில் முதல் கட்ட பணியாளர்களுக்கு வழங்கப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஏகேபி சத்பாவனா ஹோமியோபதி மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ளது.


அதன்படி , கொரோனாவுக்கான மருந்துகளை ஆயுர்வேத, ஹோமியோபதி, யுனானி மருத்துவர்கள் பரிந்துரைக்கும்போது, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

கொரோனோ நோயாளிகளுக்கு பாரம்பரிய முறையில் சிகிச்சை அளிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும் அரசு அங்கீகரித்த மாத்திரைகள், மூலிகை கலவைகளைக் கொண்டு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கலாம்.


இருப்பினும் கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் இவை என எந்த மருந்தையும் குறிப்பிட்டு விளம்பரம் செய்யக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here