சர்வதேச வேட்டி தினம் : பிரபல ஜவுளிக் கடையில் ஒரு வேட்டி 20 ரூபாய்க்கு விற்பனை!

சிவகங்கை –
காரைக்குடியில் வேஷ்டிகள் தினத்தை முன்னிட்டு, 20 ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

வேஷ்டி என்பது தமிழர்களுக்கு பெருமை தரக்கூடிய விஷயமாக தற்போத மாறிவிட்டது. முன்பெல்லாம் வேஷ்டி தான் இந்தியா முழுவதும் பெரும்பாலானோரால் உடுத்தப்பட்டது. ஆனால் இந்த பழக்கம் மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது.

வேட்டியை குஜராத்தில் தோத்தியு என்றும், ஒடிசாவில் தோத்தி என்றும், மேற்குவங்கத்தில் தூட்டி, கர்நாடகாவில் கச்சே பான்ச்சே, அசாமில் சூரியா என்று அழைக்கப்படுகிறது. என்னதான் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும், தமிழ்நாட்டில் தமிழகர்கள் வேட்டியை மடித்து கட்டி மீசையை முறுக்குவது என்பதே தனி மவுசுதான்.

அதுவும் அரசியல்வாதிகள் என்றால் அவர்களின் அடையாளமாகவே வேட்டி இருந்து வருகிறது. வேட்டியை கட்ட தெரியல நீ எல்லாம். என இளசுகளை திட்டாத பெரியவர்கள் இல்லை. இதற்காகவே தற்போதைய காலத்தல் ரகரகமாக விதவிதமாக வேட்டிகள் வந்துவிட்டது. வேட்டிகயை கட்ட தெரியாதவர்கள் கூட ஒட்டிக்கொண்டே கட்டிக்கொள்ளும் விதமாக புத்தம் புது முறைகள் வந்தன. திருமணத்திற்கு மட்டும் கட்டி வந்த வேட்டியை இப்போது தமிழகத்தில் எந்த பண்டிகை வந்தாலும் வேட்டி அதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

பாராம்பரிய ஆடைகளை பாதுகாக்கும் வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேட்டி தினமாக கடைபிடிக்கப்படும் என யுனெஸ்கோ அறிவித்தது. இந்த நிலையில் வேட்டி தினத்தையொட்டி இன்று காரைக்குடி உதயா ஜவுளி விற்பனை கடையில், பொதுமக்களுக்கு ஒரு வேட்டி இருபது ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

500 பேருக்கு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தலா ஒருவருக்கு ஒரு வேட்டி வழங்கப்பட்டது. இதனை வாங்க ஆண்கள் பெண்கள் என ,நீண்ட வரிசையில் நின்று 20 ரூபாய்க்கு வேஷ்டியை பெற்றுச் சென்றனர். குறைந்த விலைக்கு வேஷ்டி கிடைத்ததால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here