தமிழ்ப்பள்ளிகளில் பாலர்பள்ளி எண்ணிக்கை – எது தடையாக இருக்கிறது?

மலேசியாவில் பணக்காரர்கள்,  நடுத்தர மக்களைவிட பி 40 வகை மக்களே மிக அதிகம் . இவர்கள் அனைத்து தரப்பிலும் அதிகமாக இருக்கிறன்றார்கள் என்பதில் ஒளிவில்லை. இருந்தாலும் இந்தியர்கள் விழுக்காடு அதிகம்

அரசாங்கம் இதை உணர்ந்தே செயல்படுகிறது என்பதிலும் ஐயமில்லை. ஆனாலும் இச்செயல்பாடுகளில் திருப்தி என்பது இருக்கிறதா என்பதில் மனவருத்தம் அதிகமாகவே இருக்கிறது.

குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லலாம்.  தமிழ்ப்பள்ளிகள் என்றாலே ஆரம்ப பள்ளிகள்தான். இடைநிலைப்பள்ளிகள் வேண்டும் என்ற  கூக்குரல் எழும்பிய வேகத்தில்  அடங்கிப்போய்விட்டது.

ஆனால், ஆரம்பத் தமிழ்ப்பள்ளிகளில் நடைபெற்றுவரும் பாலர்ப்பள்ளிகள்  பி 40 வகை மக்களுக்கு என்று சொல்வதில்தான் குறைபாடுகள் குவிந்து கிடக்கின்றன.

தமிழ்ப்பள்ளிகளில் நடைபெற்றுவரும் பாலர்ப்பள்ளிகளில் மாண்வர்கள் எண்ணிக்கை 25 ஐத் தண்டுவதில்லை. அதற்குமேலும் முட்டிக்கரணம் போட்டாலும் முடியாது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் சுயமாக முயற்சி மேற்கொண்டால் மட்டுமே மேலும்  ஒரு வகுப்பு தொடங்க முடிகிறது. ஆனாலும் எல்லா பள்ளிகளிலும் இது  சாத்தியமில்லை.

பி 40 பிரிவினர் ஏழைகளா? நடுத்தர வர்க்கமா ? அல்லது பணக்காரர்களா? அவர்களின் குழந்தைகள் தமிழ்ப்பள்ளிகளில் நடைபெறும் பாலர்ப் பள்ளிகளில் படித்தால்தான் அடுத்துவரும் ஆண்டில் முதலாம் வகுப்பில் சேரமுடியும்.  ஆனால் அப்படிச்செய்ய முடிவதில்லையே! 

கூடுதலாக 25 மாணவர்கள் மட்டுமே என்றால் கூடுதலான ஏழைக்குழந்தைகளைத் தனியார் பாலர்ப் பள்ளிக்குத்தான் அனுப்ப வேண்டியிருக்கும். இப்படிச் செய்ய பி 40 வகையினரால் முடியுமா?

தாஙகள் விரும்பிய, அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்க் கல்வியைப்பெற ஏன் இத்துணை இடையூறுகள், கட்டுப்பாடுகள்? தமிழ்க்கல்வி என்ன நாலாந்தர  கல்வியா?

பி 40 வகை மக்களால் தனியார் பள்ளிக்கு அனுப்ப முடியுமா? தமிழ்ப்பிள்ளைகள் தாய்மொழிக் கல்வியைத் தொடரக்கூடாது என்பது போலவே  உணர முடிகிறது. 

தமிழ்ப்பள்ளிகளில் பதிய முன்வரும் அனைத்து பி 40 பிரிவினரின் குழந்தைகள் பாலர்ப் பள்ளிக்குச் சேர்த்துக்கொள்ளப்பட எதுதான் தடையாக இருக்கிறது/ 

அப்படியொரு தடை இருக்கிறதா என்பதை கல்வியமைச்சு விளக்கவேண்டும் என்றே பல பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பாலர்ப்பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கப் படவேண்டும் என்பதே பி 40 வகை பெற்றொர்களின் ஆழமான எண்ணம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here