ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் ருத்ரன்: படப்பிடிப்பு தொடக்கம்!

ராகவா லாரன்ஸின் புதிய படமான ருத்ரனின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குநராக அறிமுகமாகும் படம் – ருத்ரன். கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார். ஜிகர்தண்டா, ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்துள்ளார். இசை – ஜி.வி. பிரகாஷ். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள லக்‌ஷ்மி பாம் என்கிற ஹிந்திப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியானது. பி. வாசு இயக்கத்தில் சன் டிவி தயாரிக்கும் சந்திரமுகி 2 படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதையடுத்து ருத்ரன் படத்திலும் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here