நம்ம சென்னை’ அடையாள சிற்பம் திறப்பு

சென்னை:
சென்னை, மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, ‘நம்ம சென்னை’ அடையாள சிற்பத்தை, முதல்வர்பழனிசாமி., திறந்து வைத்தார்.
சென்னை மாநகராட்சி பகுதியில், மாநகராட்சி சார்பில், சென்னை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில், சென்னையின் பெருமையையும், மாண்பையும் கொண்டாடும் விதத்திலும், பொதுமக்கள், ‘செல்பி’ எடுத்து, சென்னை மாநகரத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, ‘நம்ம சென்னை’ என்கிற அடையாள சிற்பம், 24 லட்சம் ரூபாய் மதிப்பில், காமராஜர் சாலை, ராணிமேரி கல்லுாரி எதிரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பம், சென்னையில் முக்கிய அடையாளமாக திகழும்.டில்லி, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் உருவாக்கப் பட்டு உள்ளன.
சிற்பங்களின் தொடர்ச்சியாக, சென்னையில் தற்போது, ‘நம்ம சென்னை’ அடையாள சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது.இதை, முதல்வர் பழனிசாமி., திறந்து வைத்தார்.’இ – சைக்கிள்’அத்துடன், ‘இ – மிதிவண்டிகள்’ மற்றும் அடுத்த தலைமுறைக்கான மிதிவண்டிகள் திட்டத்தையும், முதல்வர் துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், 500 இ – மிதிவண்டிகள், 500 அடுத்த தலைமுறைக்கான வண்டிகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு, தயாராக உள்ளன.’இ – மிதிவண்டிகள்’ குறைந்த மனித சக்தியில்,பேட்டரிகள் உதவியுடன், அதிவேகமாக இயங்கும் திறன் உடையவை. சக்கரங்கள் எளிதில் பழுதடையாத வகையிலும், மிகக் குறைந்த பராமரிப்பு செலவில், அலுமினிய அலாய் தொழில்நுட்பத்தில், மிகவும் எளிதாக பயன்படுத்தும் வகையில், அடுத்த தலைமுறைக்கான மிதிவண்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here