தமிழைக் காப்போம் தலை நிமிர்வோம்!

 

தமிழைத் தமிழாய் மதிக்காமல்- ஏதோ, 

தத்துப் பிள்ளை வளர்ப்பாக;

உமிழ்ந்து பேசும்  தமிழாரே!- மனம்

உணரா திருத்தல் சரிதானா?

பெற்ற அன்னை படுந்துன்பம்- கண்ணில்,

பட்டும் அறியா துறக்கத்தில்,

சற்றும் அறியா திருப்பதினால்- நெளி

சாக்கடை புழுக்களும் மதிக்காதே!

பெற்றவள் மற்றவள் போலல்ல!- தமிழ்,

பெற்றவ ரெல்லாம்  குலதெய்வம்!

குற்றம் ; என்றும் அறிந்தும் நீ – தினம்,

கொள்கை யாக்கிக் கொளல் பாவம்!

தமிழோய்! தமிழ்தான் தமிழாகும்  – அந்தத்

தமிழ்தான் பிறைப்பைத் தரங்காட்டும்!

அமிழ்தாய் கிடைத்தும் அருந்தாமல் – வேற்றை,

அமுதாய் அருந்தல்  குலநாசம்?

                                                – வீர. கா. அருண்மொழித்தேவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here