கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டவர்களில் 97 சதவீதத்தினர் திருப்தி அடைந்துள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் கடந்த ஜனவரி 16- ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுவதும் போடப்பட்டு வருகின்றன. இவற்றில் சுகாதார பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இதனை தொடர்ந்து வயது முதிர்ந்தோருக்கு தடுப்பூசிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளன.