சீனப்புத்தாண்டில் சிங்க நடனமும் -ரோஜா மலர்களும்

விடிந்தால் சீனப்புத்தாண்டு  பொதுவாகவே சீனப்புத்தாண்டு சீனர்களுக்காக இருந்தாலும் ஒட்டுமொத்த மலேசியர்களுக்கும் இப்புத்தாண்டு மிகவும் விஷேசமானது.

நாட்டின் பெரும்பான்மை நிறுவனங்களில் , தொழில்களில் வேலையில் இருக்கும் சாமானியர்களுக்கு இரண்டு நாள் அல்லது ஒருவாரம் வரை விடுமுறை கிடைப்பதும் , ஆங் பாவ் எனும் போனஸ் கிடைப்பதும் கடந்த காலங்களில் முக்கியமாக இருந்தன. 

இப்படிப்பட்ட  ஆங் பாவ்  சமாச்சசாரங்கள் பல அயலார் நிறுவனங்களில் ஆண்டு இறுதி போனஸாகக் கிடைப்பதுண்டு. அப்பட்டிப்பட்ட போனஸ் சமாச்சாரங்கள் இந்த ஆண்டு இருக்குமா? இந்த  ஏமாற்றம் பல மாதங்களாகவே அதன் அறிகுறியைக் காட்டத் தொடங்கிவிட்டன.

ஆனாலும், இன்னும் கடைசி நேர நம்பிக்கையில்தான்  சாமானியர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் மறுக்கமுடியாத செய்திதான். 

சீனப்புத்தாண்டு என்றாலே , விடுமுறை, விருந்து, சிங்க நடனம் , ஆங் பாவ் எனும் அன்பளிப்பு , குடும்ப ஒன்றுகூடல் , ஈசாங் என்ற பெருநாள் சிறப்பு உணவு என்று ஏகப்பட்டவை அடங்கியதாக இருக்கும்.

இதில், இன்னொரு செய்தியும் இருக்கிறது. சீனப்புத்தாண்டு காலத்தில் எப்போதுமே பலவித வணிகக் கடைகள் சாத்தப்பட்டே கிடக்கும். அதனால் வீட்டிற்குத்  தேவையான பொருட்கள் வாங்குவது வெகுவாகவே பாதிக்கப்படுவதுண்டு. அந்த நிலைமை இவ்வாண்டு இன்னும் மோசமாகலாம் என்பதும் விலையேற்றம் கழுத்தை நெறுக்கும் என்பதும் எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.

சாமானியர்களுக்கு ஆங்பாவ் கிடைப்பது  என்பது மிக அரிதாகவே இருக்கப்போகிறது , அல்லது கிடைக்காது. பழங்களுக்கும் வாய்ப்பில்லை.

சீனப்புத்தாண்டு ,  இம்மாதத்தின் இடைப்பட்ட காலத்தில் வருவதால் மாத வருமானம் கிடைக்கவும் வாய்ப்பில்லை. அப்படியே கிடைக்கும் என்றாலும் மாத இறுதியில் , பட்ஜெட்டில் ஏற்படும்  பாதிப்பு பெரிதாகவே இருக்கும்.

சீனர்கள் கூட வெகு அடக்கமாக சீனப்புத்தாண்டைக் கொண்டாடத் தாயாராகிவிட்டார்கள். அதிகமான ஆடம்பரச் செலவுகளை ஓரங்கட்டி வைக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படியென்றால் சீன்ப்புத்தாண்டைக் கொண்டாடாத, விடுமுறையாக மட்டுமே அனுபவிக்கின்ற மலேசியர்கள்  என்னதான் செய்யப்போகிறார்களோ? 

சீனர்களும்  சிங்க  நடனமும்  எப்போதுமே பிரிக்க முடியாதவை . அதைக்கூடத் தியாகம் செய்ய சீன வமசாவளியினர் தயாராகிவிட்டனர். அந்த வகையிலும் அவர்கள் அதிர்ஷ்டத்தை ஒத்திவைத்திருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும்

அவர்களோடு மலேசியர்கள் அனைவரும் தங்கள் அதிர்ஷ்டத்திற்கு ஆங் பாவ் இல்லாமலேயே விடுமுறை கொடுத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை . அதனால் இதை அன்பாய் ஏற்றுக்கொள்வதும் புதிய நடமாட்டக் கட்டுப்பாடுதான்.

அன்பு என்று சொல்லும்போதே இன்னொன்றையும் சொல்லித்தான் ஆகவேண்டும். அதுதான் அன்புக்குரியவர்கள் தினம்.

ஞாயிற்றுக்கிழமை வரும் அன்புக்குரியவர்கள் தினமும் சீனப்புத்தாண்டோடு இணைந்திருக்கிறது. அந்த செலவுகளும் இருக்கின்றன என்பதால் இந்த ஆண்டு அன்புக்குரியவர்க்ள் தினம் ரோஜாக்களிலிருந்து ஒற்றை ரோஜாவில் அடங்கிவிடும் என்றுதான் தோன்றுகிறது. 

உணவுக்கடைக்கடையில் இருவர் மட்டுமே அமரமுடியும் என்பது சற்று ஆறுதலாக இருந்தாலும் அன்புக்குரியவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகவே இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

வெளிப்படுத்தும் அனபைக் கூட தொற்று நெருங்காமல் வெளிப்படுத்த வேண்டும் என்பதும் பாதுகாப்புக்கு முதலிடம்  கொடுப்பதே முக்கியம் என்பதும்  கவனத்தில் இருக்க வேண்டும்.

அனைவருக்கும் சீனப்புத்தாண்டு, அன்புக்குரியவர்கள் தின வாழ்த்துகள்.

கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here