உத்தரகாண்ட் பனிச்சரிவு

          பலி எண்ணிக்கை 58 ஆனது

உத்தரகாண்ட் பனிச்சரிவால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் 58 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்னும் 146 பேரைக் காணவில்லை.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என அம்மாநில நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சப்டால் மஹாராஜ் தெரிவித்தார்.

சமோலி பனிச்சரிவு குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும். செயற்கைக்கோள்கள் மூலம் எல்லா பனிப்பாறைகளும் ஆய்வு செய்யப்படும்.

பனிப்பாறை சரிவும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் வருத்தமளிக்கிறது. சீனப் படைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க புளோட்டோனியம் பைகள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று முதல்வர் கூறினார்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட பனிச்சரிவால் உருகிய பனிக்கட்டிகள் நீராக பெருக்கெடுத்து அருகேயுள்ள தவுளிகங்கா  அலக்நந்தா ஆற்றில் கலந்தது. இதனால் பெருவெள்ளம் ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 58 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை.

மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், தேசிய அனல்மின் நிலையம் வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here