கரீப்பியன் நாடான டொமினிக்கன் குடியரசு நாட்டுக்கு இந்திய தடுப்பூசிகள் போய்ச்சேர்ந்துள்ளன.


இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு கடந்த மாதம் ஒரே நேரத்தில் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்த தடுப்பூசிகள் உள்நாட்டில் போடப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அந்த வகையில் கரீப்பியன் நாடான டொமினிக்கன் குடியரசு நாட்டுக்கு இந்திய தடுப்பூசிகள் போய்ச்சேர்ந்துள்ளன.
இதை மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் தெரிவித்தார். இதையொட்டி அந்த நாட்டின் அதிபர் லூயிஸ் அபினேடர் வெளியிட்ட டுவிட்டர் பதிவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், டொமினிக்கன் குடியரசின் வெளியுறவு மந்திரி ராபர்டோ அல்வாரேஜ் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில் 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை துரிதமாக வழங்கியதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.