நீரிழிவு நோயாளிகள் வெங்காயம் சேர்த்து கொள்வது நல்லதா..?

 -ஆய்வுகள் தரும் தகவல்..!

உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயாளிகள் உணவைப் பற்றி மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வெங்காயத்தால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது பெரும்பாண்மையான மக்களுக்கு ஒரு கேள்வியாக உள்ளது. நீங்கள் நீரிழிவு நோயைத் தவிர்க்க  உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவை நீங்கள் சேர்க்க வேண்டும். வெங்காயத்தையும் சேர்க்கலாம்.

இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் வெங்காயம் ஒன்றாகும், இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

குர்செடின் என்ற வேதிப்பொருள் அதிக அளவு வெங்காயத்தில் காணப்படுகிறது. இது உயிரணுக்களில் வெளியாகும் ஒவ்வாமை ஹிஸ்டமைனைத் தடுக்கிறது. கோடையில் ஏற்படும் தோல் ஒவ்வாமையையும் வெங்காயம் கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில், உடல் வீக்கத்தையும் தடுக்கிறது. கோடையில் வெங்காயம் சாப்பிடுவதோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதோ வெப்பத்தை ஏற்படுத்தாது, இது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை நிலையானதாக வைத்திருக்கும்.

பைட்டோபோரா தெரபி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஒரு நாளைக்கு 500 மி.கி அல்லது அதற்கு மேற்பட்ட அளவில் எட்டு வாரங்களுக்கு குர்செடின் உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது என்று கூறுகிறது.

ஆய்வில் அவர்கள் சரியான அளவு வெங்காயத்தை சுமார் 28 நாட்கள் உட்கொண்டனர், இதன் காரணமாக சர்க்கரையின் அளவு மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், வெங்காயத்தில் குவெர்செட்டின் மற்றும் கந்தகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here