மொரீசியஸ் ஆப்பிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு.
மொரீசியஸ் தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவுக்கூட்டத்தில் மொரீசியசுக்குத் தென்மேற்கே 200 கி.மீ. தூரத்தில் பிரஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570 கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன. நெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.
1968- இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது.

























