மழை நீர் தூய்மை, இயற்கை தன்மை அறிதல்

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மாபெரும் சாதனை

பட்டர்வொர்த்-
மழை நீர் தூய்மை மற்றும் இயற்கை தன்மை அறிதல் எனும் கண்டுபிடிப்பில் பினாங்கு, பட்டர்வொர்த், மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர்.

மூன்று மாத காலக்கெடுவில், இயங்கலை வழியாக, கண்டுபிடிப்பில் தரவுகளை இணைத்து, கோலாலம்பூரில் உள்ள உலகளாவிய மையத்திற்கு அனுப்பி வைத்ததில், அதனுடைய முடிவு மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் வெற்றிக்கு வகைசெய்துள்ளது என்று பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மாக் மண்டின் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த தன்யமித்ரன் வெங்கடேஷ், மேதனேஷ் கதிரவன், அம்புஜா சுதேசன் இந்த மூவரும் இந்த உலகளாவிய புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டனர்

மழை நீரின் தூய்மை , இயற்கை தன்மையை அறியும் அறிவியல் புத்தாக்க கண்டுபிடிப்பினை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இயற்கை கரித்துண்டுகள் மற்றும் இயற்கைப் பொருளைப் பயன்படுத்தி மழை நீரில் ரசாயனத் தன்மை இல்லாமையை உறுதிப்படுத்தியுள்ளது இவர்களது புத்தாக்க கண்டுபிடிப்பு மழை நீரைச் சேகரித்து பின் இயற்கை கரித்துண்டுகளுடன் கலந்து அவற்றை இரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இப்புத்தாக்க கண்டுபிடிப்பு முற்றிலும் இயற்கையை நேசிக்கும் வண்ணமும் மழை நீர் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டே அமைந்திருந்தது. இந்நீர் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது இப்புத்தாக்கத்தின் வழி அறிவுறுத்தப்பட்டது.

இப்புத்தாக்க போட்டியில் பல விருதுகளை வென்றிருக்கின்ற வாய்ப்பும் அமைந்துள்ளது. மாக் மண்டின் தமிழ்ப்பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ள இந்த மூன்று மாணவர்களும் ஆசிய பசிபிக் நாடுகளுடன் போட்டியிட்டு இருக்கிறார்கள். இதனுடைய முடிவுகள் கடந்த மே திங்கள் 21 ஆம் நாள் வெளியாகின .

இவர்களின் போட்டிகள்,
1. தேசிய அளவில், அனுகெரா பெரேக்கா சிப்தா மூடா – தங்கப் பதக்கம் மார்ச் 2021,
2. தேசிய அளவில் சிறப்பு விருது கோ- கிரீன் இன்னோவேட்டர் விருது, மே 2021,
3. குளோபல் ஒலிம்பியட் கிரீன் இனொவேஷன் 2021 – தங்கப் பதக்கம்
இதில் 15க்கும் மேற்பட்ட ஆசியா பசிபிக் நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here