கோலலங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளின் 500 மாணவர்களுக்கு புத்தகப்பைகள்

பந்திங்-

2021ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டில் முதலாம் வகுப்பில் கல்வியைத் தொடங்கியிருக்கும் கோலலங்காட் மாவட்டத்தில் உள்ள 13 தமிழ்ப்பள்ளிகளின் சுமார் 500 மாணவர்களுக்கு புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.

மஇகா கோலலங்காட் தொகுதி இளைஞர் பகுதித் தலைவர் ரெ. ஸ்ரீதரன் ஏற்பாட்டில் இம்மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த உதவிகள் வழங்கப்படுவதாக ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இம்மாதம் முதலாம் தேதி பள்ளி தொடங்கியதில் இருந்து இம்மாவட்டத்தில் உள்ள பத்து பள்ளிகளுக்கு இதுவரை புத்தகப்பைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இதையடுத்து கேரித்தீவிலுள்ள மேலும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கோலாலங்காட் மாவட்ட தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுகு ஆண்டுதோறும் புத்தகப் பைகள், பள்ளி உபகரணப் பொருட்கள் போன்ற
உதவிகளைத் தாம் தொடர்ந்து செய்து வருவதாகவும் இதைத் தொடர்ந்து இவ்வாண்டு பல்கலைக்கழகங்களில் தங்களின் உயர் கல்வியைத் தொடர்வதற்கு இடம் கிடைத்துள்ள வசதி குறைந்த நூறு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திடத்தை மேற்கொண்டு, இதுவரை மூன்று மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாகவும் சிலாங்கூர் மாநில மஇகா இளைஞர் பகுதித் தலைவருமான ஸ்ரீதரன் தெரிவித்தார்.

-எம்.எஸ்.மணியம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here