மொழி அழிந்தால் இனம் அழியும்

-இனம் அழிந்தால் மொழி அழியும்

தாய்மொழியான தமிழை இந்தியர்கள் அனைவரும் நம் உயிர்போல் நேசிக்க வேண்டும் என்று இளம் தொழில்முனைவர் அத  Awelwin Trading நிறுவன உரிமையாளர் அவெலினோ செபஸ்தியன் கூறுகிறார்.

ஈப்போவைச் சேர்ந்த அற்புதராஜ்-ரஞ்சிதமேரியின் புதல்வரான அவெலினோ ஆரம்பக்கல்வியை மலாய்ப்பள்ளியில் தொடங்கினாலும் தமிழின் மேல் கொண்ட ஆர்வத்தினால் தற்போது தமிழ்மொழியை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

ஆரம்பப்பள்ளியில் பிஓஎல் வகுப்பில் கற்ற தமிழ்மொயை இடைநிலைப்பள்ளியில் தொடரமுடியாமல் போனதை எண்ணி வருந்திய எவெலினோ தன் சுய முயற்சியால் தமிழ்பால் கொண்ட பற்றால் விடாது படிக்கத் தொடங்கினார்.

கடந்த 9 ஆண்டுகளாக இந்நிறுவனத்தை நடத்திவரும் எவெலினோ ஆரம்ப காலத்தில் போக்குவரத்து சுற்றுலாத்துறையில் தன் தந்தையுடன் இணைந்து களம் இறங்கினார். பின்னர் காலப்போக்கில் சுற்றுலாத்துறையில் பெரிய வருமானம் ஈட்ட முடியாமல் கச்சாங் பூத்தே இனிப்புப் பலகாரங்கள் ,  சமையலுக்குப் பயன்படுத்தும் கறித் தூள் வகைகளைக் கொள்முதல் செய்யும் வியாபாரியாகக் காலூன்றினார்.

தமிழ்மொழியின் மாண்பையும் மேன்மையையும் பெரிதும் உணர்ந்த எவெலினோ தமிழ்ப்பள்ளியில் படித்தாலும் பிள்ளைகள் சாதனையாளர்களாக முடியும். கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் தமிழ் வழியில் கல்வி கற்போருக்கு நல்லதோர் எதிர்காலம் காத்திருக்கிறது என்றார் எவெலினோ.

தான் தமிழ்ப்பள்ளியில் கற்காவிடினும் தன் பிள்ளையைத் தமிழ்ப்பள்ளியில் பதிந்துள்ளதைப் பெருமையாகக் கொள்வதாகக் கூறினார்.

மக்கள் ஓசை செயல் அதிகாரி எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் மெங்கலெம்பு தமிழ்ப்பள்ளிக்கு மக்கள் ஓசை நாளிதழ்களை நாள்தோறும் 3 மாதங்களுக்கு வழங்குவதற்கு நிதி உதவி அளிக்கும் விண்ணப்பப் பாரத்தை ஒப்படைத்தார் எவெலினோ. இவரைப்போல் தமிழுக்குத் தொண்டு செய்வோரை மக்கள் ஓசை வணங்கி பாராட்டுகிறது.

உமாதேவி பிரபாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here