பியூட் தமிழ்ப்பள்ளி கல்வி மேம்பாட்டிற்கு முன்னாள் மாணவர்களின் உதவி

 

சிப்பாங்-

இம்மாவட்டத்திலுள்ள பியூட் தமிழ்ப்பள்ளியின் தலை எழுத்தை மாற்றி அங்கு மாணவர்களின் கல்வி தர மேம்பாட்டிற்கு முன்னாள் மாணவர் என்ற முறையில் தமது உதவிகள் தொடரும் என்பதுடன் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் வாயிலாக பள்ளி வளர்ச்சிக்கு பாடுபடுவேன் என்று இப்பள்ளிக்கு இலவசமாக மக்கள் ஓசை நாளிதழை வழங்கி வரும் ராஜன் நல்லு கூறினார்.

கடந்த காலத்தை காட்டிலும் தற்போது இந்த பள்ளியில் இவ்வாண்டு தொடக்கம் மொத்தம் 18 மாணவர்கள் கல்வி பயின்று வருவதே ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த 2019-2020 ஆண்டு மிகச்சிறிய அறையில் 10 மாணவர்களுடன் செயல்பட்டு வந்த போது இந்த பள்ளி எப்போது மூடப்படும் என்று மட்டுமே பேசப்பட்டதே தவிர இந்த பள்ளியை எப்படிக் காப்பாற்றுவது என்று பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை மு.கெங்கம்மாள் இப்பள்ளிக்கு புதிதாக மாற்றலாகி வந்தாலும் 8 மாணவர்களை சேர்த்து புதிய உற்சாகம் ஏற்பட்ட நிலையில் இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் உலக நடப்புகளைத் தெரிந்துகொள்ள மக்கள் ஓசை நாளிதழ் பெரும் பங்காற்றும் என எண்ணி மாணவர்களுக்கு நாளிதழை தாம் இலவசமாக வழங்க முன் வந்ததாக ராஜன் நல்லு கூறினார்.

இந்த பள்ளியில் மாணவர்களை உயர்த்துவதை எனது தலையாய கடமை.தற்போது அனைத்து தரப்பினர் உதவ முன் வருவதாது குறித்தும் சிறிய பள்ளியாக இருந்தாலும் இந்த பள்ளியை ஒரு முன் உதாரணமாக பள்ளியாக உருவாக்குவதே லட்சியமாக கொண்டுள்ளதாக கெங்கம்மாள் குறிப்பிட்டார்.

தற்போது இலவசமாக கிடைக்கு மக்கள் ஓசை நாளிதழ் அனைத்து மாணவர்களும் நேர கால மாற்ற அடிப்படையில் ஒவ்வொரு நாளும் படித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் கி.தயாளினி, இரா.தினேஸ்வரன், கி.தினேஸ்வரி, க.எல்வின், கி.கீர்தீஸ்வரன், க.அமுஸ், கோ.பிரதோஷன், நே.திலகன், மி.சந்தியா ஆகியோர் ஆர்வமுடன் படித்து வருவதை பார்க்கும் போது இது ஒரு நல்ல திட்டம் என்று குறிப்பிட்டனர். இப்பள்ளி மக்கள் ஓசை நாளிதழை முன்னாள் மாணவருமான ராஜன் நல்லு பள்ளி தலைமை ஆசிரியர் மு.கெங்கம்மாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் மருதமுத்து, பள்ளி ஆசிரியர்கள் தே.ஜெமிமா, இரா.பத்மாவதி, ச.ஷாமினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here