சுய லாபச் சூனியக்காரார்கள்

பெஞ்ச் பெரியசாமியின் பூகம்ப அலசல்

-தொடு தூரத்தில் கொலைக்கரங்கள்!

மலேசிய நாடு சிறப்பான நாடு என்றும் மகிழ்ச்சியான நாடுகளில் 181 ஆவது இடத்தைப்பிடித்திருக்கிறது என்றும் படித்ததுன் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.

அது பொய்யாக்கிவிடுமோ  என்பதுபோல் அரசியல் நடந்துகொண்டிருக்கின்றன. என்ன என்கிறீர்களா? ஆமாம் நாட்டின் முன்ளாள் தலைவர்களைக் கொலை செய்யும் முடிவுக்கு வந்திருப்பதில் அகாவுடன் பேசப்படும் நாடாக மாறிவருகிறோம் என்பதும் மகிழ்ச்சியான செய்திதானே! என்னே நான் சொல்றது!

நம்பிக்கை கூட்டணியின் உயர்நிலைத்தலைவர்களை கொளாஈ செய்யும்  முயற்சியை போலீசார் தடுத்திருக்கின்றனர் எனபதும் பாராட்டபடத்தான் வேண்டும். இதை போலீசார்ரின் முதிர்ந்த முயற்சிகள் வளர்ந்து விட்ட நாடுகளுக்கு ஈடானவை என்ரு ஒப்பிடுவதிலும் தவறில்லை. 

முன்னாள் பிரதமர், துன் டாக்டர் மகாதீர் முகம்து, முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், அப்போதைய இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சர் அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா, அப்போதைய சட்டத்துறை அமைச்சர் டான்செரி டோமி தோமஸ் ஆகியொர் கொலைப்பட்டியலில் இருந்திருக்கின்றனர் என்பதை போலீசார் மோப்பம் பிடித்து தடுத்தமைக்கு இன்னொரு சபாஷ் போடத்தானே வேண்டும்.

இவர்களைக் கொலை செய்யத்திட்டமிட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை தி மலேசியன் இன் சைட் செய்தி வெளியிட்டது. கொலை செய்யவிருந்த நபர் கடந்த ஜனவரியில் சிக்கியிருக்கிறார். ஆனாலும் இவர் பற்றிய உண்மை நிலவரங்கள் இன்னும் முழுமையாக இல்லை. இவரின் விவரங்களைப்பெறும் முயற்சி போலீசாரச் சார்ந்தது. நாம் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாமே!

நாம் சொல்ல வந்தது இதுதான். எப்போதுமே வீரர்கள் விவேகமாகவே நடந்துகொளவார்கள். கொலை செய்யும்  குறுக்கு வழிகளை கேவலமாகச் செய்யக்கூடியவர்கள் அல்லர்.

இப்பட்டிச் செய்பவர்கள் அரசியல் பலவீனமானவர்களாகத்தான் இருப்பார்கள். தங்களின் பலவீனத்திற்கு எதிர்ப்பானர்களைப் போட்டுத்தள்ளும் முயற்சிதான் தங்களின்  பலம் என்று கற்பனை செய்துகொள்பவர்கள்.

 

சரியான வீரர்களாக இருந்தால் நேர்வழியில் களம் கண்டிருப்பார்கள். அப்படிச்செய்ய முடியாமல் கொலை செய்யும் அளவுக்கு முன்னேறி இருப்பது ஓர் அசாத்திய  முயற்சியாகும். 

கொலை முயற்சியில் சம்பந்தபட்ட நபர் இஸ்லாமிய தீவிரவாத கும்பலில் ஒருவர் என்றும் நம்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட எழுவரில் இவரும் ஒருவராம். இதில் ஒருவர் சிங்கப்பூரில்,கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படவேண்டும் என்பதுதான் உண்மையான மலேசியர்களின்

 எண்ணமாக இருப்பதால் இஸ்லாமிய தீவிரவாத வளர்ச்சிக்கு விரோதமாக இருப்பவர்களைத் தீர்த்துக்கட்டும் முயற்சி ஒருபக்கம் கிளைவிடத்தான் செய்யும். ஏனென்றால் போதனை அப்படி.

மலேசிய போலீசார் இதை தீவிரமாகவே கண்காணித்து வருகின்றனர் என்பதால் அச்சம் அதிகமாக எழவில்லை. ஆனாலும் போலீசார் அசந்துவிடக்கூடாது என்ப

 

தில் மக்களும் விழிப்பாக இருக்க வேண்டுமல்லவா

 

!

மக்களின் தேசிய உணர்வு தட்டி எழுப்பப்படும்போது இனவாதத்திற்கு நீர் ஊற்றுகின்றவர்களும் தீவிர வாதிகளாகத்தான் கருதப்படுவார்கள். இத்தகைய எண்ணத்தையும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். 

அண்டை மாநிலம் அயல் நாட்டிலா இருக்கிறது? இயற்கையின் கொடையாகக் கிடைக்கும் நீருக்கு ஏன் இத்தணைப் பிடிவாதம். மாநிலத்திற்கு நீர் வழங்குவதையும் விரும்பாதவர்களாக இருந்தால் மலேசிய நாடு முன்னேறுவது எப்படி? 

சட்டமும் ஒழுங்கும் தேச பக்தியும் பாதுகாக்கப்பட்டால்தானே நாடு வளமுடையதாக இருக்கும்! அதை அழிக்க முயல்கின்றவர்களை வேடிக்கை பார்க்கக் கூடாது.

 

இன்னும் பேசுவோம்லே….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here