ரந்தாவ் பஞ்சாங், டிசம்பர் 21 :
இரண்டு தனித்தனி மாவட்டங்களில், வெள்ளத்தில் வீடுகள் மூழ்கிய 11 கோவிட் -19 நோயாளிகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்.
அவர்களில் 6 பேர் குவா மூசாங்கிலும், மேலும் 5 பேர் ரந்தாவ் பஞ்சாங்கிலும் இருந்து மீட்கப்பட்டதாக கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் ஜைனல் மண்டசின் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கைகளின் போது தீயணைப்பு வீரர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை (PPE) அணிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“டிசம்பர் 17 முதல் இன்று வரை, மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 14 நடவடிக்கைகளின் மூலம் 62 வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் மிட்கப்பட்டனர்.
“மிட்கப்பட்ட 62 பேரில், 11 பேர் கோவிட் -19 க்கு நேர்மறையான முடிவை சோதனையில் பெற்றதாக சுகாதார ஊழியர்களால் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
“மீட்புப் படையினர் தங்கள் PPE உடை அணிந்தபடி, பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்றனர்,” என்று ஜைனல் இன்று இங்குள்ள கம்போங் டெர்சாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதன்போது கிளந்தான் பேரிடர் மேலாண்மை இயக்குநர் நிக் மொஹமட் நூர் நிக் இஷாக் உடனிருந்தார்.
கோவிட் -19னால் பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் இரு மாவட்டங்களில் உள்ள சிறப்பு வெள்ள நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக ஜைனால் கூறினார்.



















