ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா (Jim Corbett National Park) இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா ஆகும்.
இது புகழ்பெற்ற புலிகள் வாழிடம். பூனை இன விலங்குகளான புலி, சிறுத்தை போன்றவையும் அவற்றின் இரையான மானினங்களும் இப்பூங்காவின் விலங்கினங்களில் முக்கியமானவை. யானைகள், கரடிகளும் பிற சிறு விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.
இங்குள்ள மரங்களில் 110 சிற்றினங்களும், பாலூட்டிகளில் 50 சிற்றினங்களும், பறவைகளில் 580 சிற்றினங்களும், ஊர்வனவற்றில் 25 சிற்றினங்களும் காணக்கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பூங்காவின் ஊடாக ராம்கங்கா ஆறு ஓடுகிறது. இதில் முதலைகளையும் காணமுடியும். ஆண்டுதோறும் நவம்பர் 15 முதல் ஜூன் 15 வரை பூங்கா திறந்திருக்கும்.