வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதே மேல்!

வேலைக்குச் செல்ல விருப்பமா?  மீள் பார்வை வேண்டும்!

வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை அகற்ற வேண்டும் என்ற எண்ணம் இருக்குமாயின் அதை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிறது.

இதற்குக்காரணம் இருக்கிறது. கோவிட் -19 எண்ணிக்கை குறைந்துவருவதற்கான சூழல் சாதகமாக இல்லாதிருப்பதே இதற்குக்காரணம் என்றும் குரல் எழுந்திருக்கிறது.

சுகாதாரப் பாதுகாப்பில் தவறு இருக்கிறதா! அல்லது இயல்பு நடமாட்டக் காட்டுப்பாடுகளில் பலவீனம் இருக்கிறதா என்பதிலும் ஐயம் எழாமல் இல்லை. ஆனாலும் சுகாதாரப்பிரிவின் கடுமையான முயற்சிகளையும், போராட்டத்தையும்  பாராட்டாமல் இருக்க முடியாது. 

பலவீனம் என்பது அனைத்து துறைகளிலும் இருக்கிறது. அதுபோலவே மக்களிடமும் கூடுதல் பலவீனம் இருக்கிறது. அப்படி இருப்பதால்தான் கொரோனா நம்மோடு  நெருக்கமாக இருக்கிறது. அகல மறுக்கிறது.

சில நாடுகளில் நான்காம் அலையும் தாக்கும் அபாயம்   நிலவுகிறது என்று மலாயா பல்கலைக்கழக தொற்று நோய்ப்பிரிவு, பொது சுகாதாரத்துறையின்  பேராசிரியர் சஞ்சை ரம்பால்  தெரிவித்திருக்கிறார்.  இதே கூற்றை மலேசிய மருத்துவத்துறைத் தலைவரான டாக்டர் சுப்பிரமணியம் ஒத்துக்கொண்டிருக்கிறார்.

உலக நாடுகளில் கொரோனா தொற்று குறையாமல், அதன் பரிணாமம் மாற்றமடைந்து, மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வரும்போது  மலேசியர்கள் அதுபோன்ற பாதுகாப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதே சிறந்தது என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை. 

ஏனெனில், மீண்டும் தொழிலுக்காக  அலுவலகங்களுக்குத் திரும்பும்போது கூடல் இடைவெளி ஒத்துழைக்காது . அப்படியே அலுவலகங்களுக்குத் திரும்பும் சூழல் ஏற்பட்டால் கூடல் இடை வெளியைக் கையாளும்  தகுதி இருக்க வேண்டும். தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

கூடல் இடைவெளி என்பதில்  நிறைய உள்ளடக்கம் இருக்கிறது. சிறிய அறைகளில் அதிகம் பேர் இருக்க முடியாது. போதுமான காற்றோட்டம் இல்லாத அறைகள் சுகாதாரமற்றதாகவே இருக்கும்.

சிறிய அறைகளில் நீண்ட நேரம் என்பது நோய்த்தொற்றுக்கு வழி வகுக்கும்.  மிதக்கும் மூச்சுக்காற்றில் தொற்று இருக்குமாயின் இதனால் ஏற்படும் பாதிப்பை நிவர்த்திசெய்ய முடியாது என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுகின்றன. வெளிச்சூழலில் இப்பாதிப்பு அதிகம் இருக்காது. இதற்கான ஆதாரங்களையும் ஆய்வுகள் வெளியிட்டிருக்கின்றன.

அலுவலகம் சென்றுதான் தொழில் பார்க்க வேண்டுமென்ற கடப்பாடு உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு விரைவில் தடுப்பூசிக்கு வழி வகைகள் செய்ய வேண்டும். 

கார்களிலும் இதுபோன்றே சூழல் அமைந்திருக்கும். அதே நிலைதான் கட்டடங்களிலும் இருக்கும். உள் கட்டமைப்பும் காரைப்போன்றே இருப்பதால் தொற்றுப்படிமங்கள் மிதந்து சுற்றிக்கொண்டே இருக்கும்.

டிங்கிக் கொசுவின் தாக்கமும் இப்படிப்பட்டதுதான். டிங்கிக்கொசுவின் தூரம் 50 கிலோ மீட்டர் வரை என்றும் கணக்கிடப்பட்டிருக்கிறார்கள். இதுபோலவே  கொரோனா வைரஸ் தொற்று 7 முதல் 9 மீட்டர் வரை பயணிக்கும் என்றும்  ஆய்வுகள் தெளிவு படுத்தியுள்ளன.

அலுவலகங்கள் பழைய நிலைக்குத்திரும்பினால் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். தவிர்க்க முடியாது.

அப்போது சுகாதாரத்துறையின் உழைப்பு பல மடங்கு கூடும். இதற்கு வலுவான நடமாட்டக் கட்டுப்பாடு தேவைப்படும்  சுகாதாரத்துறைக்கு சுமைகள் கூடும்.  – கா.இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here