புத்ராஜெயா: மலேசியாவில் கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வியாழக்கிழமை (ஏப்ரல் 15) 2,148 புதிய தொற்று பதிவாகியுள்ளன.
கடைசியாக நாட்டின் தினசரி புள்ளிவிவரங்கள் 2,000 க்கு மேல் இருந்தன – மார்ச் 5 அன்று – அன்று 2,154 வழக்குகள் இருந்தன.
சுகாதார தலைமை இயக்குநர் டான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஒரு டூவிட்டர் பதிவில், சரவாக் அனைத்து மாநிலங்களிலும் 512 புதிய தொற்று சம்பவங்களுடன் அதிக எண்ணிக்கையில் உள்ளதாகவும், சிலாங்கூரில் 459 நோய்த்தொற்றுகள் உள்ளன என்றும் கூறினார்.
ஒட்டுமொத்தமாக, தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து நாட்டில் 367,977 உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் -19 தொற்று சம்பவங்கள் உள்ளன.