குரல் கொடுக்கத் தயங்கியதில்லை

முனியாண்டி

இந்து  சமயத்திற்குப் பிரச்சினை என்று வரும்போதெல்லாம் குரல் கொடுக்க தயங்கியது கிடையாது – பினாங்கு இந்து சங்கத் தலைவர் முனியாண்டி நினைவுறுத்து

பினாங்கு-

பல இனம் வாழும் மலேசியத் திருநாட்டில் இந்து மதம் சார்ந்து பிரச்சினைகள் எழும்போதெல்லாம்  குரல் கொடுக்கவும், கண்டனத்தைப் பதிவு செய்யவும் தயங்கியது கிடையாது என்று பினாங்கு இந்துச் சங்கத் தலைவரும், மத்திய ஆட்சிக்குழு உறுப்பினருமான மா.முனியாண்டி திட்டவட்டமாகக் கூறினார்.

நாட்டில் இந்து மக்களை இழிவுபடுத்திப் பேசுவதும், மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கவும் தொடர்ந்து தொடர்ந்து தனது சதிநாச வேலையைச் செய்தி வரும் சம்ரி வினோத் காளிமுத்துவுக்கு எதிராக சமூக இயங்கங்களோடு  800 போலிஸ் புகார்களப் பதிவிசெய்துள்ளோம்.

நாடு தழுவிய நிலையில் 172 இந்து சங்க பேரவையினர், 14 மாநிலங்கள் சம்ரி வினோத் காளிமுத்துவுக்கு எதிராக கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறோம் என்று மா.முனியாண்டி கூறினார்.

சம்ரி வினோத் காளிமுத்து இந்து மதத்தை இழிவுபடுத்திய நடவடிகையை உறுதிப்படுத்த, நாட்டில் பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக இந்து சங்கத்தைத்தான் தொடர்புகொண்டு, காளிமுத்து பேசிய பேச்சி இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையிலிருந்தனவா என்று பல்வேறு கோணங்களின் விசாரணை நடத்தியுள்ளார்கள் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.  என்று மக்கள் ஓசை நிருபரின் கேள்விக்கு வழங்கிய செய்தியில் மா.முனியாண்டி இதனைக்  குறிப்பிட்டார்.

நாட்டில் இந்து மதத்திற்குப் பிரச்சினைகள் வரும்போது இந்து சங்கம் ஒன்றும் செய்யவில்லை என்று பேசுகின்றவர்கள், கொஞ்சம் மனசாட்சியுடன் சிந்தித்துப் பேச வேண்டும். நாட்டில் பிற சமயத்தை இழிவு படுத்திவரும்  சம்ரி வினோத்தை கண்டிக்காமல்  இந்து சமயத்திற்காகக் குரல் கொடுக்கும் சங்கத்தைக் கேள்வி கேட்டும் நிலையை எண்ணி ஆதங்கப்பட வேண்டியிருக்கிறது. 

 ஒருவரை குறைகாணும் முன், தன்னுடைய குறை என்ன, இந்த இந்து சமுதாயத்திற்கு உங்களின் பங்குதான் என்ன என்று எண்ணிப் பார்த்தபிறகு அநாகரீக கருத்தைப் பதிவு செய்வது நியாயமானதா என்று சிந்தித்துப் பாருங்கள் என்று பினாங்கு இந்து சங்கத் தலைவரும், தேசிய ஆட்சிக்குழு உறுப்பினருமான மா.முனியாண்டி தெரிவித்திருக்கிறார்.

செ.குணாளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here