மலேசியாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம்

புதிய தொற்று 3,332
மரணம் 15

புத்ராஜெயா-

மலேசியாவில் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கின்ற நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,332 ஆகப் பதிவுபெற்றிருக்கிறது. இரண்டாவது நாளாக இந்த எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்து நிற்கின்றது.

கோவிட்-19 தொற்று ஓர் அமைச்ரையும் விட்டுவைக்கவில்லை. தொடர்ந்து பல்லூடகத்துறை அமைச்ர் டத்தோ  சைபுடின் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர்ஹிஷாம் அப்துல்லா நேற்று தெரிவித்தார்.

அதிகமான மக்கள் பாதிக்கப்பட்ட மாநிலமாக சிலாங்கூர் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றது. கடந்த 24 மணி நேரத்தில் 1,083 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

அதே சமயத்தில் மரண எண்ணிக்கை 15 என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் இதுவரை மொத்தம் 4 லடசத்து 4 ஆயிரத்து 925 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நேற்று மொத்தம் 1,943 பேர் குணமடைந்திருக்கின்றனர். இவர்களோடு சேர்த்து இதுவரை 3,75 ஆயிரத்து 340 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருக்கின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.

நேற்று நண்பகல் வரை மொத்தம் 28,093 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் 309 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளை

யில் இவர்களுள் 147 பேருக்கு செயற்கை சவாசக் கருவி தேவைப்படுவதாக இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15 பேர் கொரோனாவால் மரணமுற்றிருக்கின்றனர். இவர்களுடன் சேர்த்து  இதுவரை 1,492 பேர் மரணம் எய்திருக்கின்றனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இது தேசிய பாதுக்கப்பு மன்றத்திடம் பேசவிருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி

522 நோயாளிகளுடன் சரவாக் 2ஆவது நிலையில் உள்ளது. கிளந்தானில் அந்த எண்ணிக்கை 401 ஆகப் பதிவாகியிருக்கிறது. கோலாலம்பூர் 359, ஜோகூர் 207, பினாங்கு 158, சபா 131, நெகிரி செம்பிலான் 111, கெடா 105, பகாங் 92, பேராக் 91, மலாக்கா 43, திரெங்கானு 19, புத்ராஜெயா 9, பெர்லிஸ் 1 என புதிய செம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன என்று டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here